Thursday, October 13, 2011
கலாச்சாரத்தை ஞாபகபடுத்தும் திருவிழாக்கள்
எங்கள் தெருவில் பாவாடை தாவணியில் பொண்ணுங்க. என்னடா சிவா தெரு மாறி வந்துடோமாநு நினைக்குறதுகுள்ள அம்மா வந்துட்டாங்க. அப்புறம் தா தெரிந்தது காளியம்மன் கோவில் திருவிழா என்று. திருவிழா என்றதும் சிறு வயது ஞாபகம். முளைப்பாரி தூக்கி எல்லாரும் எறும்புகள் queue'ல போறது மாதிரி, அவ்வளோ அழகா போவாங்க.
8 நாள் திருவிழா'கு daily கும்மி அடிப்பாங்க. அதுல பொண்ணுங்க மட்டும் தா அடிக்கணும்'நு சட்டம் வேற. சின்ன வயசுல நானும் என் தம்பி கார்த்திக்கும் கும்மி அடிக்க ஊர் பெரியவங்க கிட்ட சண்ட போட்டு, அப்புறம் கும்மி அடிப்போம். இபோலாம் திருவிழா பக்கம் போறதுக்கு நேரமே இல்ல. கும்மி அடிக்குறதுக்கு ஒரு குடத்தில் தண்ணி வச்சு, அந்த குடத்த சுத்தி சுத்தி கை தடிகிட்டே பாடி வருவோம். அந்த குடத்துக்கு தண்ணி எங்கள் வீட்டுலயோ உங்க வீட்டுலயோ எடுக்க மாட்டாங்க. கோவில்ல இருந்து 2km நடந்து பெரிய கோவிலுக்கு போய், அங்க உள்ள கிணத்துல தண்ணி மோந்து திரும்ப கோவிலுக்கு வந்து கும்மி அடிக்கணும். இப்படியே 7 நாள் போகும். 8 'ஆவது நாள் முளைப்பாரி தூக்குவோம்.
சின்ன வயசுல நானும் முளைப்பாரி தூக்குவேன். என்னோட பாட்டி எனக்கு ஒரு trouser வாங்கி கொடுக்கும். பேரன் வளரட்டும் நு 2 பேர் உள்ள போற மாதிரி ஒரு trouser. அதுக்கு belt போட்டா ஏதோ சுருக்கு பைக்குள்ள 2 ஓட்ட போட்டு தச்ச மாதிரி இருக்கும். அப்புறம் பாட்டி வந்து அறைஞான்கைறு வச்சு கட்டி விடும். "இன்னும் 10 வருஷத்துக்கு இந்த trouser போட்டுக்கலாம் டா பேராண்டி"ன்னு கன்னத்த பிடிச்சு கில்லி விட்டு போகும். அதுக்காக இதே மாதிரி எத்தன trouser வேணாலும் போடலாம்'நு தோனும்.
அப்புறம் 8th day night உடம்பு full 'அ சந்தனம் தேச்சு தலைக்கு ஒரு சமக்காடு வச்சு, அது மேல முளைப்பாரி வச்சு நடந்து ஊற ஒரு round அடிப்போம். கூட துணைக்கு அம்மா வருவாங்க. 9 th day முளைபாரிய கொண்டு போய் குளத்துல கரைசிர்வோம். இந்த 9 நாள் மத்தியானம் மட்டும் தா சாப்டனும். ராத்திரி ஒரு வாழைபழம், காலைல பட்டினி.
திருவிழா பார்க்கும் போது தா பழைய தமிழ் கலாச்சாரம் ஞாபகத்துக்கு வருது. இந்த விஞ்ஞான காலத்துல, பழைய தமிழ் கலாச்சாரத்தை ஞாபக படுத்தும் திருவிழாக்கள் இன்னும் அதிகம் ஆக்கப்பட வேண்டும். ஷங்கர் படங்களை பார்க்க பழகிவிட்ட தமிழ் மக்கள், பாரதிராஜா படங்களை மறக்க கூடுமோ?
Subscribe to:
Post Comments (Atom)
No Deposit Casino Bonuses 2021 - Play With $5000 Free
ReplyDeleteNo Deposit Casino Bonuses 2021 - Play With $5000 바카라 Free! Find the Best 바카라 추천 사이트 No 바카라 양방 Deposit หาเงินออนไลน์ Casinos that are Real Money, Casino Games and More, apr casino No Deposit Required!